உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
111 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்று (07) வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலைமையை ஆராயும் நோக்கில் இராணுவம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து அவசர ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினர்.

அண்மையில் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் மோதல் மற்றும் அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளதையடுத்து, அவற்றின் தாக்கம் ஏனைய சிறைச்சாலைகளிலும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பது தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

61 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

76 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0