உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
15 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திராய்க்கேணி படுகொ*லையின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
155 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க் கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் (06) மாலை அக்கிராமத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அக்கிராமத்து மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, இம்முறையும் படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் இந்நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கிராம மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீபமேற்றி, சிறப்புப் பூஜைகள் வழிபாடுகளை மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நினைவேந்தல் நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர்களான திரு. காந்தன், தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாடு மேய்க்கச் சென்ற நபர் காட்டு யானை தாக்கி உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம் உகன  பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பகுதியில் வனக்காட்டுக்குள் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கிப் பரிதாபமாக உயிரிடைந்துள்ளார். மகாகண்டிய…

101 0 0
அம்பாறை செய்திகள்

மர்மமான முறையில் குடும்பஸ்தர் உ**யிரிழப்பு.!

“வயல் காவலுக்காகச் செல்ல வேண்டும், உணவைக் கட்டி வையுங்கள்” என்று தாயாரிடம் சொல்லிவிட்டு மாலையில் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பஸ்தர் ஒருவர், மறுநாள் காலையில் மர்மமான முறையில்…

103 0 0
அம்பாறை செய்திகள்

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபாவளி விசேட பூஜை வழிபாடு.!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் வெகுசிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. திருக்கோவில்…

107 0 0
அம்பாறை செய்திகள்

அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ அதிகாரி உயி@ரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை புறநகர் பகுதியில் உள்ள குளம் ஒன்றில்  மீன்பிடிக்கச் சென்றபோது…

104 0 0