உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு – 14 பேர் பலி!

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
72 பார்வைகள்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகியுள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் அம்மாரா நகரில் மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது.

இந்த வழிபாட்டு தலத்திற்கு பிரார்த்தனை செய்ய கடந்த 03 ஆம் திகதி காலை ஏராளமானோர் சென்றுள்ளனர். மலைப்பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலத்தில் 21 பேர் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணுடன் பாறைகள் உருண்டு மதவழிபாட்டு தலம் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் மத வழிபாட்டு தலத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0