மூத்த குடிமகள் கௌரவிப்பு விழா.!
அடம்பன் சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் ஏற்பாடு செய்த மூத்த குடிமகள் கௌரவிப்பு விழா நேற்று புதன்கிழமை (5) காலை அடம்பன் சிரேஷ்ட பிரஜைகள் சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது.
சமூகத்தின் மதிப்பிற்குரிய மூத்தோரின் அனுபவம், அறிவுரை, சேவை மற்றும் பங்களிப்பை பாராட்டி குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் பிரதேச செயலாளர் கலந்து கொண்டார்.
இதன்போது சிரேஷ்ட பிரஜை கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









