உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல் : ஏமன் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா தூதர் ஆலோசனை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
137 பார்வைகள்

செங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஹூதி அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் ஏமனின் தற்போதைய அரசியல், மனிதாபிமான சூழ்நிலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் ஹான்ஸ் க்ரண்ட்பெர்க்குடன் (Hans Grundberg) ஏமன் வெளியுறவு அமைச்சர் அஃப்ரா அல்ஜூபா (Afrah Alzouba) ஆலோசனை நடத்தியுள்ளார்.

செங்கடல், பாப் அல்-மந்தப் (Bab al-Mandab) மற்றும் ஏமன் வளைகுடா பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பு, பிராந்திய அளவிலான மோதல்களை தீவிரப்படுத்த ஏமன் மண்ணைப் பயன்படுத்தி வருகின்றதாகவும் அமைதி நடவடிக்கைகளில் ஹூதி அமைப்பினர் தீவிரமாக ஈடுபடுவதை உறுதி செய்ய, அவர்கள் மீது சர்வதேச சமூகம் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் ஏமன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐ.நா தூதர் ஹான்ஸ் க்ரண்ட்பெர்க் தெரிவிக்கையில், பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், ஏமனில் நிலையான பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த, நீதியான மற்றும் முழுமையான அரசியல் அமைதி செயல்முறையை முன்னெடுத்துச் செல்வது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உயிருடன் திரும்புவேனா என்று தெரியவில்லை! : இம்ரான் கான்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறி அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது…

84 0 0
உலக செய்திகள்

இந்தியாவின் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான்

இந்தியா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஷாங்காய்  (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பின் கலாசார மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை…

83 0 0
உலக செய்திகள்

ஏதிலிகளை நாடு கடத்த ருவாண்டாவில் விசேட மையம் – ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து நடவடிக்கை!

ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ஏதிலிகளை நாடு கடத்தும் நோக்கில், ருவாண்டாவில் விசேட மையமொன்றை அமைக்க ஐந்து ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன. ஜேர்மனி, டென்மார்க், ஒஸ்திரியா, கிரீஸ்…

93 0 0
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயி@ரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகருக்கு வெளியே அமைந்துள்ள ஸ்வீட்வாட்டர்ஸ்…

85 0 0