உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உடன்பாடு!

உலக செய்திகள் 1 மாதம் முன்
74 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் அமையும் கப்பல் போக்குவரத்துப் பாதையின் புவியியல் பண்புகள் குறித்து ஈரானும் ஓமானும் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகெய் (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூட்டறிக்கை இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், அது பாதுகாப்பான போக்குவரத்துக்குத் தாமாகவே உத்தரவாதம் அளித்துவிடாது என குறிப்பிட்டுள்ள அவர், அப்பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் இன்னமும் அதன் பாதுகாப்பைக் குலைக்கும் வகையில் அமையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சின் டெலிகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்துக்களில், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பின்மைக்குக் காரணமான பல காரணிகள் இன்னமும் நிலவுவதாக இஸ்மாயில் பகாய் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அறிவித்துள்ள கடற்படை முற்றுகை மற்றும் “ஈரானுக்கும் அதன் நலன்களுக்கும் எதிரான ஏனைய ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள்” ஆகியவற்றை இதற்குச் சான்றாக அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கிரீஸ் விமானக் கண்காட்சியில் பயங்கர விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிரீஸின் தலைநகர் ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள தனாக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற “Athens Flying Week 2026” சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, கிரேக்க விமானப்படைக்குச் சொந்தமான…

84 0 0
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின்…

120 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரானுடன்…

97 0 0
உலக செய்திகள்

அமேசன் வணிக விமானம் விபத்து – ஐவர் பலி

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் ஐந்து…

108 0 0