உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
81 பார்வைகள்

சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு “ஆரோக்கியமான சிற்றுண்டிகளை ஊக்குவிப்போம்” என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சியானது இன்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு, ஆரத்தி நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள் என்பன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து கண்காட்சியானது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சானது வேல்ட் விஷன் நிறுவனத்துடன் இணைந்து வருடா வருடம் இந்த கண்காட்சியை முன்னெடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்றையதினம் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனும் சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், சங்கானை பிரதேச செயலாளர் உ. கவிதா, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜெயந்தன், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் இ.ஜமுனா ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வேல்ட்விசன் வட மற்றும் வடமேற்கு வலய முகாமையாளர் அ. ஐஜிட் நிசாந்தன், வேல்ட்விசன் யாழ்ப்பாணம் திட்ட முகாமையாளர் அ.அன்டன் ரோய் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் தாய்மார் கழகத்தினர், சமூக மட்ட அமைப்பினர், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர், பொது சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது தானிய உணவு வகைகள், கடல்சார் உணவு வகைகள் போன்ற பல்வேறு வகையான ஆரோக்கியம் சார்ந்த உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

61 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

76 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0