உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்; விவசாயிகள் கவலை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
133 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக வீசி வரும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரினுள் மூழ்கியுள்ளதாகப் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இயற்கை சீற்றத்தின் திடீர் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நிந்தவூர் விவசாயப் பிரிவுப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பால் பிடிக்கும் பருவத்திலும், வளர்ந்த நிலையிலும் காணப்பட்ட நெற்பயிர்கள் பலத்த காற்றினால் தரைமட்டமாகச் சாய்ந்துள்ளதுடன், தொடர் மழையால் வயல்வெளிகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது. இதனால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, நீரில் மூழ்கிய நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வடிகான் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வயல்களிலிருந்து மழைநீர் வெளியேறுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு, உரம் மற்றும் விதை நெல் செலவுகளுக்கு மத்தியில் கடன் பட்டாவது சிறுபோக/பெரும்போகச் செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு இந்நிலைமை பெரும் பொருளாதார பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பாதிப்புக்குள்ளான வயல்நிலங்களை விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் கமநல சேவை அலுவலர்களும் உடனடியாகப் பார்வையிட்டு, பயிர்ச்சேத மதிப்பீடுகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கமும் விவசாயக் காப்பீட்டுச் சபையும் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

81 0 0