உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆங்கிலக் கால்வாயில் தீப்பற்றி எரிந்த படகு – 157 அகதிகள் பிரான்ஸ் கடற்படையினரால் மீட்பு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
136 பார்வைகள்

பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்து உடனடியாகச் செயல்பட்ட பிரான்ஸ் கடற்கரை காவல்படை, மூன்று மீட்புக் கப்பல்களை அனுப்பி படகில் இருந்த 157 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது.

அண்மைக்காலமாக ஆபத்தான இந்த கடல் வழியைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள் தகுதியற்ற சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமான மக்களை ஏற்றிச் செல்வதால் இத்தகைய கொடூர விபத்துகள் தொடர்ந்து நிகழ்கின்றன. கடந்த வாரம் கூட இதேபோன்று சிறிய படகில் கால்வாயைக் கடக்க முயன்ற மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு செய்தித் தொடர்பாளர், “இந்த சம்பவம் சிறிய படகுகள் மூலம் கடல் கடப்பதில் உள்ள பயங்கர ஆபத்தை உணர்த்துகிறது. இத்தகைய ஆபத்தான பயணங்களைத் தடுக்க பிரான்ஸ் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

2015-16 காலகட்டத்தில் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடிக்குப் பிறகு ஐரோப்பாவில் குடியேற்றம் மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0