உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
79 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.

இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையும் மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தம் செய்வதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவுடன் எந்தவித நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஓமன் நாட்டினருடன் மட்டுமே கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஓமன் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த உலர் சரக்குக் கப்பல் மீது அடையாளம் தெரியாத பொருள் தாக்கியதில், கப்பலிலிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.இந்தத் தாக்குதலில் மாலுமி ஒருவர் மாயமாகியுள்ளார்.

உலகளவில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20 சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் தற்போது கப்பல் போக்குவரத்து பெருமளவில் முடங்கியுள்ளது.

அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், சர்வதேச சந்தையில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கிப் போரைத் தொடரவே ஈரான் முயன்று வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அதேவேளையில், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பின்னணியில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0