உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆப்கானிஸ்தானில் சிறுவர்களிடையே கடும் ஊட்டச்சத்துக் குறைபாடு!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
129 பார்வைகள்

ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் மூன்றில் ஒரு பங்கு மாகாணங்களில் ‘சிறுவர் உடல் மெலிவு’ ஆபத்தான அளவை எட்டியுள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது.

இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுவதாகவும், பலர் மிகவும் தாமதமாகவே மருத்துவ மையங்களுக்கு அழைத்து வரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ஆப்கானியர்கள் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சர்வதேச நிதி உதவியில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு ஆகியவையே இந்நிலைக்கு முதன்மை காரணங்களாகும்.

நிதியுதவி தட்டுப்பாடு காரணமாக, கடுமையான பஞ்சத்தைத் தடுக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வந்த உணவு விநியோகத் திட்டங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், இலட்சக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சிறுவர்களின் உயிரைப் பாதுகாக்கவும் அடுத்த ஆறு மாதங்களுக்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0