உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தென் கொரியாவில் கடும் வெப்ப அலை : 19 பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
82 பார்வைகள்

தென் கொரியாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலைமையை ஒரு ‘தேசியப் பேரிடர்’ என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே-ம்யுங், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அதிகரிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

செவ்வாயன்று (04) அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய லீ, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், குளிரூட்டி (AC) வசதி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின்சார அமைப்புகளைச் சோதிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தென்கொரியாவில் ஞாயிற்றுக்கிழமையன்று 42.5 டிகிரி செல்சியஸ் (108.5 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 122 ஆண்டுகால வானிலை பதிவுகளில் இதுவே மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.

கொரிய வானிலை ஆய்வு மையம், சியோல் (Seoul) மற்றும் அதை ஒட்டிய கியோங்கி (Gyeonggi) மாகாணத்தின் சில பகுதிகளுக்குத் திங்களன்று முதன்முறையாக வெப்ப அலை (heatwave) எச்சரிக்கையை விடுத்தது.

செவ்வாய்க்கிழமையன்று இந்த எச்சரிக்கை தலைநகர் பகுதி முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

வெப்ப அலை எச்சரிக்கையானது, விவசாயம், விளையாட்டு மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0