உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை; மின் பாவனையாளர்கள் விசனம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
76 பார்வைகள்

மன்னார் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், இதனால் மின் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக சீரான மின் விநியோகம் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக இரவு பகல் பாராது மின்தடை ஏற்பட்டு வருகிறது.

திடீர் திடீர் என இரவு பகல் பாராது மின்தடை ஏற்படுவதால் மின் பாவனையாளர்களின் மின் உபகரணங்கள் சேதமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்த காலங்களில் பரீட்சை காலம் நெருங்குகின்ற போது மன்னாரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை போன்று தற்போது புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை நெருங்கும் காலப்பகுதியில் குறித்த மின்தடை இடம்பெற்று வருவதாக மின் பாவனையாளர்களும், மாணவர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த மின்தடை தொடர்பாக மன்னார் மின்சார சபை அதிகாரிகள் மற்றும் வடக்கிற்கு பொறுப்பான மின்சார சபை அதிகாரிகள் உரிய பதிலை வழங்குவதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த உரிய அதிகாரிகள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி அடிக்கடி ஏற்படும் மின் தடையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

49 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0