உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

இந்திய செய்திகள் 2 வாரங்கள் முன்
66 பார்வைகள்

தஞ்சையில் நேற்று (03) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, உதயநிதியின் பேச்சு விவகாரத்தில் அவரை கைது செய்ய, நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பு இன்று காலையில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினரிடம் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றி வரும் தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் கண்டித்து 22 நிமிடங்கள் பேசினேன். அரசு எப்படியெல்லாம் விவசாயிகளை ஏமாற்றுகிறது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மேகதாதுவை எதிர்த்து குரல் கொடுக்க திராணியற்ற, தெம்பில்லாத, பயந்தாங்கொள்ளி அரசாக இருக்கிறது என்றுதான் ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.

அதையெல்லாம் மறைக்க இப்போது இந்த பிரச்சினையை உருவாக்கியுள்ளனர். பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில், ரீல்ஸ் வெறி முற்றிப்போய் முதல்வரும், அமைச்சர்களும் வாழ்வதாக நேற்று பேசினேன். ஆனால், நான் பேசாத ஒன்றை பேசியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, பொய் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. இதனை சட்டப்படி நான் சந்திப்பேன்.” என்று தெரிவித்துள்ளார். அவரை பொலிஸார் தஞ்சை அழைத்துச் செல்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

57 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0