உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள ஈரானின் புதிய திட்டம்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
135 பார்வைகள்

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரக் தடைகள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில், குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கான பொருளாதார மீள்தன்மைத் திட்டம் (Economic resilience plan) தயாராக உள்ளதாக ஈரானின் பொருளாதார அமைச்சர் அலி மதனிஸாதே (Ali Madanizadeh) தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் எதிரிகளின் சதிகளுக்குப் பதிலடி கொடுக்கவும் அரசாங்கம் முழுத் தயார் நிலையிலிருப்பதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க ஈரானிடம் பதில் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் பொருளாதார ரீதியாக ஈரானை அழிக்க நினைப்பவர்களின் ஆசை ‘கல்லறைக்கே செல்லும்’ ”என அந்த நாட்டுப் பொருளாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீது சர்வதேச அளவில் பொருளாதாரத் தடைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கவும் பொருளாதாரச் சீர்குலைவைத் தடுக்கவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0