ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு : ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே “கடைசி வாய்ப்பு” என்று எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் தனது கருத்துக்களை தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் கட்டார் ஆகிய வளைகுடா நாடுகளின் கோரிக்கைக்கு அமைவாகவும், ஈரானின் விருப்பத்திற்கு இணங்கவுமே தற்போது இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான கடைசி வாய்ப்பை இழக்க நேரிடும்.
ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சு மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக உறுதியாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.