மொஸ்கோவில் குண்டு வெடிப்பு – மூவர் பலி!
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள ஆடம்பர உணவகத்திற்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெண்ணொருவரால் எடுத்துவரப்பட்ட சுயமாகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று இவ்வாறு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொஸ்கோவின் பிரபல கட்டிடங்களில் ஒன்றில் அமைந்துள்ள இத்தாலிய உணவகத்திற்குள் இனந்தெரியாத பெண்ணொருவர் நுழைய முற்பட்டுள்ளார்.
எனினும் அவரை அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு ஊழியரொருவர் தடுத்துள்ளார்.
இதன்போது அந்த பெண்ணிடம் இருந்த குண்டு வெடித்துள்ளதாகவும் அதில் அப்பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் இத்தாலிய உணவகத்தின் வாடிக்கையாளர் ஒருவர் என மூவர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் பல்வேறு அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.