உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
55 பார்வைகள்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை.

ஹோர்முஸ் நீரிணையை விரைவாக மீண்டும் திறப்பது மற்றும் தெஹ்ரானின் அணுசக்தித் திறன் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான உடன்பாட்டை எட்டும் நோக்கில், உடனடியாக மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலைத் தாம் கைவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.

ஈரானும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் நீரிணையை “உடனடியாக, முழுமையாகவும் முற்றாகவும் மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவதற்கும் வழிவகுக்கும் உடன்பாட்டை நிறைவு செய்ய அவகாசம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

தெஹ்ரான் விரைவாக ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறுகையில், திங்கட்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிவித்தார்.

எனினும், அது எங்கு நடைபெறும் அல்லது யார் பங்கேற்பார்கள் என்பது பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை.

ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா என வினவப்பட்டபோது, அதற்குப் பதிலளிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார்.

அதற்குப் பதிலாக, நான் ஓர் உடன்பாட்டை எட்டவே விரும்புகின்றேன். நான் மனிதர்களைக் கொல்ல விரும்பவில்லை, ஏனெனில் ஏராளமானோர் இறக்கிறார்கள், அதை நாங்கள் விரும்பவில்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0