உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறப்பது தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
89 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறப்பது தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

தெஹ்ரானின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் மற்றும் ஓமான் இடையே பகிர்ந்து கொள்வது தொடர்பில் அமெரிக்கா – கட்டார் முன்வைத்த உடன்பாட்டிற்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஈரானிய இராணுவ வட்டாரமொன்றை மேற்கோள்காட்டிய ஃபார்ஸ் நிறுவனம், ஈரானின் புரட்சிகர காவல்படை (Revolutionary Guards) உடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளாத எந்தவொரு கப்பலுக்கும் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இதுகுறித்த பதற்றம் தொடர்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0