உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி மீண்டும் பூட்டு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
95 பார்வைகள்

இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக திறக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் மூடப்பட்டது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் செல்லும் வீதி மக்களின் காணியூடாக தற்காலிக பாதையூடாகவே செல்லும் வகையில் திறக்கப்பட்டதுடன் நிரந்தர பாதை மூடப்பட்டே இருந்தது. எனினும் சில நாட்களில் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணியை சுற்றி வேலியை அமைத்ததால் மக்கள் ஆலயத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் இராணுவத்தினரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடமும் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து இராணுவத்தினருடன் கலந்துரையாடியதையடுத்து நிரந்தர பாதை தற்காலிகமாக திறக்கப்பட்டது.

இதையடுத்து ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்ட பின் வீதியால் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை திருவிழா முடிந்த நிலையில் நிரந்தர பாதை மூடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

59 0 0
இலங்கை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

39 0 0
இலங்கை செய்திகள்

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு.!

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

67 0 0