பாகிஸ்தானில், நிலக்கரி சுரங்க விபத்து : 11 பேர் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 11 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
வியாழக்கிழமை இந்த பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்து, பல மணி நேரங்களுக்குப் பிறகே சுரங்கத் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மீத்தேன் வாயுவின் தேக்கத்தால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில், இடிந்து விழுந்த வளாகத்தின் பகுதியில் மொத்தம் 36 பேர் இருந்ததாக மாகாணத்தின் தலைமைச் சுரங்க ஆய்வாளர் முஹம்மது ஆதிஃப் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை இரவு வரை 28 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்றும், 4,000 அடி (1,219 மீட்டர்) ஆழத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் அவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.