உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போலந்துக்கு ஆதரவாக களமிறங்கிய நேட்டோ!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
127 பார்வைகள்

போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை ஒன்று நுழைந்து வீழ்ந்து நொறுங்கியதால், அங்கு நேட்டோ போர் வானூர்திகள் அவசரமாக அனுப்பப்பட்டன.

வியாழக்கிழமை அதிகாலையில் போலந்து வான்வெளிக்குள் நுழைந்த இந்த ஏவுகணை, இரவோடு இரவாக யுக்ரைன் மீது ரஷ்யா ஏவிய பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலின் ஒரு பகுதி என்று கருதப்படுகிறது.

இதில் சிறுவர்கள் உட்பட குறைந்தது எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏவுகணை தென்பட்டதைத் தொடர்ந்து, போலந்து உட்பட நேட்டோ உறுப்பு நாடுகள், ஜெட் வானூர்திகளையும்,வான்வழி எரிபொருள் நிரப்பும் வானூர்தியையும், வான்வழி முன்னெச்சரிக்கை வானூர்தியையும் களமிறக்கியதாக நேட்டோ கூட்டணியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தனது பிராந்தியத்தைப் பாதுகாக்க நேட்டோ அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0