உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
111 பார்வைகள்

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில், மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை இன்று (28) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மன்னாரிலிருந்து தலைமன்னார் வரை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக முதலாவது ‘சிசு செரிய’ பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தலையீட்டின் பேரில், 20 பேருந்துகளை ஈடுபடுத்தி ‘சிசு செரிய’ திட்டத்தின் முதற்கட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவைக்கு மன்னார் மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் பேருந்து ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
‘சிசு செரிய’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், மன்னார் மாவட்ட மாணவர்கள் பல வருடங்களாக பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து சேவைகள் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.

அத்துடன், கடந்த கால அரசாங்கங்கள் வடபகுதி மாணவர்களைப் புறக்கணித்துச் செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.

இச் சேவையின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சாதாரண கட்டணத்தில் பாதி மட்டுமே அறவிடப்படும் என்பதுடன், மீதித் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கும்.

இதன் மூலம் கல்விக்காக பயணிப்போருக்கு கணிசமான நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரச அதிபர் கே. கனகேஸ்வரன், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன், மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஷ் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

41 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0