உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

புற்றுநோய் ஏற்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு – இழப்பீடு வழங்க Johnson & Johnson நிறுவனம் இணக்கம்

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
80 பார்வைகள்

குழந்தைகளுக்கான பேபி பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், Johnson & Johnson நிறுவனம் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ.52,000 கோடி) இழப்பீடு வழங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள சுமார் 69,000 வழக்குகளில், 95 சதவீதத்திற்கும் அதிகமான மனுதாரர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

J&J நிறுவனத்தின் டால்க் (Talc) அடிப்படையிலான பேபி பவுடர் பயன்பாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

எனினும், தனது தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், அவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் Johnson & Johnson நிறுவனம் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

எனினும், இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கிலேயே 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிறுவனம் 2020ஆம் ஆண்டு அமெரிக்க சந்தையில் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை நிறுத்தியதுடன், 2023ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியிலும் அதன் விற்பனையை முழுமையாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!!

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செயற்கைக்கோள் நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள்…

12 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

42 0 0
உலக செய்திகள்

இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்!

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

49 0 0
உலக செய்திகள்

இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள் : இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை

இந்தியாவில் மீட்கப்பட்ட ஐந்து ஒராங்குட்டான் குட்டிகளை அவற்றின் சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு மீள அனுப்புவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தோனேசிய அரசு முதன்முறையாக…

22 0 0