உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் மாவட்ட அரச உத்தியோகத்தர்களினால் நடைபவனி முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
137 பார்வைகள்

நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நேர்மை கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் நடைபவனி இடம்பெற்றது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமான குறித்த நடைபவனி பிரதான பாதையூடாக மன்னார் பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.

அங்கிருந்து குறித்த நடைபவனி மன்னார் நகர பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.

குறித்த நடைபவனியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பணியாளர்கள், பிரதேச செயலக பணியாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸார், இராணுவம், சுகாதார துறையினர், அரச தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.

அரச சேவையில் நேர்மை பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நேர்மை வாரம் நேற்று திங்கட்கிழமை (27) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் குறித்த நடைபவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

42 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0