உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கனடாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
63 பார்வைகள்

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், கட்டிடத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மார்ச் 10 ஆம் திகதியும் இந்தக் கட்டிடத்தை இலக்கு வைத்து பல துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

டொராண்டோ பகுதியில் உள்ள யூத தொழுகைக்கூடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்தே இச்சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

இதன் காரணமாக, கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் முன்பாகப் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

டொராண்டோ பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து, யூத தொழுகைக்கூடங்கள், யூத பாடசாலைகள் மற்றும் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

மார்ச் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அந்த நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0