உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமெரிக்க நாட்டின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் மன்னாரிற்கு விஜயம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
88 பார்வைகள்

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க நாட்டின் (United States)இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள், இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை மன்னாரிற்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான (மெசிடோ) நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர்.

மன்னாரிலுள்ள (மெசிடோ) நிறுவன அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மற்றும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் தற்போதைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள் ஆழ்ந்த ஆர்வத்துடன் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

மேலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார மீட்பு, நிலையான அபிவிருத்தி, சமூக நீதி, மனித உரிமைகள், நல்லாட்சியை பலப்படுத்துதல் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அதேவேளை, தற்போதைய சூழலில் வடக்கு மக்களும் சிவில் சமூக அமைப்புகளும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், நில உரிமைகள், வாழ்வாதார பாதுகாப்பு, இளைஞர்களின் பங்கேற்பு, பெண்களின் பங்கேற்பு, சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பல்வேறு கருத்துக்கள் சிவில் சமூக பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன.

பங்கேற்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது துறைசார் அனுபவங்கள், களப் பணிகளில் இருந்து பெற்றுள்ள தகவல்கள் மற்றும் மக்களின் தேவைகளை நேரடியாக பிரதிபலிக்கும் பரிந்துரைகளை பகிர்ந்துகொண்டனர்.

அவற்றை அதிகாரிகள் கவனமாக கேட்டறிந்து, எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

இவ்வாறான சந்திப்புகள், சர்வதேச சமூகத்திற்கும் உள்ளூர் சிவில் சமூகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதோடு, மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி, சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான பயனுள்ள உரையாடல்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய வாய்ப்பாக அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

124 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0