உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
153 பார்வைகள்

கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் உக்ரேனால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டும் ஈரான், இச்சம்பவம் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக டெஹ்ரானில் உள்ள உக்ரேன் தூதரை ஈரானிய வெளியுறவு அமைச்சுக்கு அழைத்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி தெரிவிக்கையில், ரஷ்யா மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து பெறப்படும் செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளை ஈரானுக்கு வழங்கி வருவதை தமது நாடு அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவிலிருந்து ஈரானுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் ரஷ்யக் கப்பல்கள் மீது கஸ்பியன் கடலில் தாம் தாக்குதல் நடத்தியதை உக்ரேன் ஒப்புக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!!

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செயற்கைக்கோள் நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள்…

14 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

43 0 0
உலக செய்திகள்

இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்!

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

50 0 0
உலக செய்திகள்

இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள் : இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை

இந்தியாவில் மீட்கப்பட்ட ஐந்து ஒராங்குட்டான் குட்டிகளை அவற்றின் சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு மீள அனுப்புவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தோனேசிய அரசு முதன்முறையாக…

22 0 0