உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

இரு பெண்களின் சடலங்கள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
67 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்கள் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதமுனை-6 ஆம் பிரிவைச் சேர்ந்த தௌபீக் சினாத் றினா (வயது 20) என்ற திருமணமாகாத பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வுயிரிழப்புத் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் பரவியதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து பல கோணங்களில் பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை தீவிரப்படுத்தினர்.

கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதனால் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.

அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது உயிரிழப்பின் துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலத்தின் சில உயிரியல் அவயங்கள் கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் புதன்கிழமை (22) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூபாலசிங்கம் கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம் மல்வத்தை-03 பகுதியைச் சேர்ந்த சிப்னா (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தாய் வியாழக்கிழமை (23) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் மரணத்திற்கான பின்னணி குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிதியறிவு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து…

38 0 0
அம்பாறை செய்திகள்

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்.!

அம்பாறை மாவட்டம் இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று திங்கட்கிழமை (20) இரவு…

52 0 0
அம்பாறை செய்திகள்

இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது.!

அம்பாறை மாவட்டம் இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில் நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் பெருந்தொகை போதைப்பொருள் மற்றும் பணத்துடன்…

95 0 0
அம்பாறை செய்திகள்

கிராம மக்களை இலக்கு வைத்து நிதி மோசடிகள்.!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிதி மோசடிகளிலிருந்து கிராம மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்வு அம்பாறை தலைமையக பொலிஸ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. அம்பாறை…

88 0 0