உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கறுப்பு ஜூலை நினைவூட்டல் துண்டுப்பிரசுரம் விநியோகம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
105 பார்வைகள்

30 ஆண்டு கால கொடூர போருக்கு வழி வகுத்த ‘கறுப்பு ஜூலை’ இனக்கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த கால வடுக்களில் இருந்து மீண்டு நாட்டில் இன நல்லிணக்கத்தை பலப்படுத்தும் நோக்கில் சோசலிச இளைஞர் சங்கத்தின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை (23) மாலை மன்னார் பேருந்து நிலையப் பகுதியில் விசேட துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை இன கலவரமானது, நாட்டின் வரலாற்றில் அழியாத வடுக்களையும், எண்ணற்ற உயிரழிவுகளையும், சொத்து நாசங்களையும் ஏற்படுத்தியதுடன், நீண்ட கால உள்நாட்டுப் போருக்கும் அடித்தளம் அமைத்தது.

இத்தகைய துயரமான சம்பவங்கள் மீண்டும் இப்பகுதியில் எக்காலத்திலும் தலை தூக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, கடந்த காலத்தில் ஏற்பட்ட இன ரீதியான முரண்பாடுகள் மற்றும் பிளவுகளைக் களைந்து, அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடனும் சமத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கும் பேருந்து நிலையப் பகுதிக்கு வருகை தந்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இனிவரும் காலங்களில் நாட்டில் மக்களுக்கிடையே இனரீதியான மோதல்களோ அல்லது கலவரங்களோ ஒருபோதும் உருவாகக் கூடாது என்ற வலுவான செய்தியை துண்டுப்பிரசுரம் ஊடாக சோசலிச இளைஞர் சங்கம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

124 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0