உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

சித்துப்பாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
117 பார்வைகள்

வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் புதைப்பதில்லை என வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளனர். அதேவேளை இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை என சட்டத்தரணி வி.எஸ் நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இது ஒரு இந்து மயானம். இதில் சட்டரீதியான புதைத்தலும் நடைபெறலாம். சிறுவர்கள் என்றால், அனுமதி எடுத்து அடக்கம் செய்யப்படும்.

ஆனால் இங்கு அதிகமான என்புக்கூடுகளை பார்க்கும்போது ஒரு குற்றம் நடந்தது, அவசரமாக புதைக்கப்பட்டது என எங்கள் சாதாரண கண்களுக்குத் தெரிகின்றது.

இது சம்பந்தமாக அறிக்கைகள் வந்த பிற்பாடுதான். அது தொடர்பில் மேலதிகமாக சொல்லக்கூடியதாக இருக்கும்.

இங்கு மீட்கப்பட்ட சில மனித என்புகள் சட்டரீதியாக புதைக்கப்பட்டதற்கான ஆடைகளோடு, சவப்பெட்டிகளோடு காணப்பட்டது. சில இடங்களில் உடற்கூற்று பரிசோதனை சான்றுகளும் காணப்பட்டன. ஆனால் அவை இங்கு புதைக்கப்பட்டதற்கு இந்த இந்து மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை.

அதேநேரம் வைத்தியசாலையை அணுகிய போது, அவர்களும் இந்த இந்து மயானத்தில் சடலங்களை புதைக்க வில்லை என்றும், தாங்கள் கோம்பயன்மணல் மயானத்தையே பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்கள்.

எனவே செம்மணி புதைகுழி தொடர்பில் முழுமையான அறிக்கைகள் வந்த பின்னரே, தெளிவாக கூற முடியும் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

130 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

112 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

110 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0