உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

இந்தியாவின் ‘குஷா’ ஏவுகணையின் முதற்கட்டச் சோதனை வெற்றி!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
127 பார்வைகள்

இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘குஷா’ (KUSHA) என்ற நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணையின் (Long-Range Surface-to-Air Missile) முதல் கட்டச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

ரஷ்யாவின் ‘S-400’ மற்றும் அமெரிக்காவின் ‘Patriot’ ஆகிய சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இணையாக, இந்தியா தனது சொந்த ‘புராஜெக்ட் குஷா’ (Project Kusha) திட்டத்தின் கீழ் இந்த அமைப்பை உருவாக்கி வருகிறது.

இந்த ஏவுகணை அமைப்பு M 1, M 2 மற்றும் M 3 ஆகிய மூன்று வகையான இடைமறிப்பு ஏவுகணைகளைக் (Interceptor Missiles) கொண்டுள்ளது.

இவை முறையே 150 கி.மீ, 250 கி.மீ மற்றும் 350 முதல் 400 கி.மீ வரையிலான எல்லைகளில் உள்ள எதிரி இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவையாகும் .

எதிரிகளின் போர் வானுர்திகள், ஆளில்லா வானூர்திகள் UAVs), ஏவுகணைகள் மற்றும் எதிரிநாடுகளின் பெரிய ரக வானுர்திகளை *400 கி.மீ தொலைவிலேயே துல்லியமாகக் கண்டறிந்து அழிக்கும் ஆற்றலை இது பெற்றுள்ளது.

இத்தகைய நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் திறன் உலகின் சில குறிப்பிட்ட நாடுகளிடம் மட்டுமே உள்ளது என்பதால், இந்தச் சோதனை இந்திய பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான…

17 0 0
இந்திய செய்திகள்

லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் (Silverstone) சிற்றூந்து பந்தய போட்டியை கொடியசைத்து ஆரம்பித்து வைக்க…

133 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்யின் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்

தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் குடும்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதெல்லாம், அவை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில்,…

120 0 0
இந்திய செய்திகள்

பயணிகள் வானூர்தியில் லண்டனைச் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக இன்று (11) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன்…

179 0 0