உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
40 பார்வைகள்

ஆனமடுவ – புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் நேற்று திங்கட்கிழமை (20) புத்தளத்தில் இருந்து ஆனமடுவ நோக்கிப் பயணித்த பேருந்தும், எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உரியாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொழும்பு – குருநாகல் வீதியில் நில்பானாகொட பகுதியில் மினுவாங்கொடையில் இருந்து திவுலப்பிட்டிய நோக்கிப் பயணித்த கொள்கலன் பாரவூர்தி ஒன்று, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் பலத்த காயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி மற்றும் அதன் ஓட்டுநர் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்குச் செல்வோருக்கு விசேட அறிவுறுத்தல்!

தற்போது நிலவும் டெங்கு பரவல் நிலைமை காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சிறுவர் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக…

69 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

50 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

17 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

14 0 0