உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விசேட கல்வி நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
114 பார்வைகள்

“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற கருப்பொருளில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விசேட கல்வி நிகழ்வு நேற்று (19.07.2026) கொழும்பு, செட்டியார் தெருவிலுள்ள ஸ்ரீ கல்யாண முருகன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு மன்றத்தின் நான்கு முக்கிய செயற்திட்டங்கள் இந்நிகழ்வில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மலையக பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டமும் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏழாவது நிர்வாகக் குழு உத்தியோகபூர்வமாக பதவியேற்றது. மன்றத்தின் தலைவராக திரு. ஆர். விஸ்வநாதன், செயலாளராக திரு. வி.பி. ஏகாம்பரம், பொருளாளராக திரு. பி. முரளி ஆகியோர் தமது பொறுப்புகளைப் பொறுப்பேற்றனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டி. சிவானந்தவேல் மற்றும் பேராசிரியர் டி.கே.என்.ஜி. புஷ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் மற்றும் மலையக மாணவர்களின் உயர்கல்வி முன்னேற்றம் குறித்து கருத்துரைகளை வழங்கினர்.

ஆண்டுதோறும் மன்றத்தால் நடத்தப்படும் “அறிவொளி” தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் மலபொட தமிழ் வித்தியாலயத்திற்கு ஒலி அமைப்பு உபகரணங்களும், வத்தளை மாணிக்கவாசகம் பாடசாலைக்கு நிழற்பிரதி இயந்திரமும் மன்றத்தின் சார்பில் வழங்கி வைக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு முதல் மலையகத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு தொடர்ச்சியாக நிதி உதவி வழங்கி வரும் மன்றம், இம்முறை அந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, தகுதி பெறும் ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவருக்கும் மாதந்தோறும் ரூ.5,000 வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாண்டு மொத்தம் 140 பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதுடன், வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மலையக மாணவர்களுக்கும் விசேட நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய மன்றத்தின் புதிய தலைவர் திரு. ஆர். விஸ்வநாதன், “மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றமே மன்றத்தின் உயர்ந்த இலட்சியம். புலமைப்பரிசில் உதவிகளை மட்டுமல்லாது, எதிர்காலத்தில் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உதவித் திட்டங்களையும் விரிவுபடுத்தி, மலையக மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்க மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் எப்போதும் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மன்றத்தின் போசகர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள், நன்கொடையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…

40 0 0
இலங்கை செய்திகள்

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் இனவாதப் போக்கிலிருந்து விலகவில்லை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள்; வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம்…

30 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள் மீட்பு

தலை மன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…

27 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்! : சஜித் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தான் உறுதியாக மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

26 0 0