உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

தொடரும் மர்ம மரணங்கள்; சர்வதேச விசாரணை தேவை.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
29 பார்வைகள்

இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மர்ம மரணங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், இது குறித்துத் தனது கடும் சந்தேகங்களை வெளிப்படுத்தினார்.

“323 கொள்கலன் விவகாரத்தில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டான் பிரியசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார். 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரத்தில் தொடர்புடைய திறைசேரி அதிகாரி ரங்க நிஷாந்த ராஜபக்‌ஷவின் மரணத்திலும் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன. தற்போது முன்னாள் பொலிஸ்மா அதிபர் உயிரிழந்துள்ளார். இவை அனைத்தையும் சாதாரண தற்கொலைச் சம்பவங்களாகக் கடந்துவிட முடியாது.” – என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இத்தகைய தொடர் மரணங்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர, தற்போதைய அரசுக்குப் போதிய திறனோ அல்லது வலிமையோ இல்லை என்பது தெளிவாகின்றது. எனவே, இவற்றை முறையாக விசாரணை செய்வதற்கு எவ்.பி.ஐ. போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியை அரசு நாட வேண்டும்.” – என்று கோரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் சர்வதேச விசாரணைகளை எதிர்த்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்போது அதேபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

14 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

12 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை  அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன…

87 0 0