உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது அநுர அரசு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
37 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசு ஜனநாயக விழுமியங்களைச் சிதைத்து, சர்வாதிகாரப் போக்கிலான தனிக் கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகச் சாடியுள்ளார்.

ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளிலான பொதுமக்கள் கருத்தாடல் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ஜனநாயகக் கட்டமைப்பானது சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரப் பரவலாக்கத்திலேயே தங்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“நீதித்துறை எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கே ஜனநாயகம் வலுப்பெறும். வரலாற்றில் மாக்னா கார்ட்டா முதல் நவீன கால சர்வதேச இணக்கப்பாடுகள் வரை நீதித்துறையின் சுதந்திரம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று உயர்மட்ட நீதித்துறை நியமனங்களைக் கூடச் செய்யாமல் அரசு நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கின்றது.” – என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசின் திட்டத்துக்குத் தனது எதிர்ப்பை வெளியிட்ட அவர், “ஜனாதிபதி முறையை ஒழிக்காமல், இந்த விடயத்தை மட்டும் முன்னெடுப்பது ஏன்? இது முழுமையாக ஜனநாயகத்தை அழிக்கும் வேலையாகும். மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் சூழலை அரசு உருவாக்கி வருகின்றது.” என்றும் குறிப்பிட்டார்.

திசைகாட்டி அரசு மக்கள் ஆணையை அவமதிக்கின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், “ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, தற்போது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முறியடிக்க வர்க்கம், நிறம் மற்றும் கட்சி பேதங்களைக் கடந்து மக்கள் ஒன்றுதிரள வேண்டும்.” – என்றும் அழைப்பு விடுத்தார்.

அரசின் இத்தகைய போக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற வர்த்தகச் சலுகைகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எத்தகைய முயற்சிகளையும் மக்கள் சக்தியால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

14 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

12 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை  அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன…

87 0 0