உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

செம்மணிப் புதைகுழியில் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

71 பார்வைகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35 ஆவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் 11 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 7 என்புக்கூடுகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர, சேதமடைந்த மோதிரம் ஒன்று, விரல் எலும்புடன் கூடிய செப்பிலான மோதிரம் ஒன்று மற்றும் குவியலாக இருந்த இரண்டு தொகுதி என்புக்கூடுகளும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் தற்போதைய மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் என மொத்தம் 89 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளின் எண்ணிக்கை 431 ஆகும். இதில் 423 என்புக்கூடுகள் இதுவரையில் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள என்புக்கூடுகளை அகழ்ந்து எடுக்கும் பணிகளும், தடயப் பொருட்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் சங்கு கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம்!

பல தசாப்தங்களாகக் காணி உரிமைக்காகப் போராடும் மலையக மக்களின் அவலங்களையும், அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி சங்கு கலைக்கழகத்தினால் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ என்ற வீதி…

53 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற…

62 0 0
இலங்கை செய்திகள்

விவசாயிகளின் வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – திலித் ஜயவீர வலியுறுத்தல்!

“எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால், இன்றைய அரசு இந்நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று…

50 0 0
இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக் கொ#லை செய்த கணவன்!

காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொ#லை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

66 0 0