உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
165 பார்வைகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று(17) உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

அத்துருகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி இது ஒரு உயிர் மாய்ப்பு சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும், மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அத்துருகிரிய பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர் இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக கடமை புரிந்ததுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

123 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0