உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
115 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 34ஆவது நாள் அகழ்வு நேற்று நடைபெற்றது. இதன்போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டன.

அத்துடன், ஒரு சிறு குழந்தையின் என்புத் தொகுதி மற்றும் குழந்தைகளின் 3 என்புத் தொகுதிகள் உட்பட மொத்தம் 7 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து இதுவரை மொத்தமாக 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 416 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகளின் போது கண்டெடுக்கப்படும் சான்றுப் பொருட்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று வெள்ளை நிறத்திலான பாசி மணி ஒன்று அடையாளம் காணப்பட்டு, அது 130ஆவது சான்றுப் பொருளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

35 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

58 0 0