உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

ஈரான் தவிர ஏனைய நாடுகளின் போக்குவரத்துக்கு ஹோர்முஸ் நீரிணை திறப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

உலக செய்திகள் 1 நாள் முன்
71 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன்படி, ஹோர்முஸ் நீரிணையானது, ஈரான் தவிர்ந்த ஏனைய நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு முற்றாகத் திறந்திருக்கும் என ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைமையின் “பொய், வன்முறை மற்றும் தீய செயல்களே” அந்த நாட்டுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்றும், இது ஈரானை “முழுமையான அழிவை நோக்கி” இட்டுச் செல்லும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடையானது ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்கள் மற்றும் ஈரானிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த அனைத்து கப்பல்களுக்கும் “முழுமையான முற்றுகை” விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

AI அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் – பிரித்தானிய மத்திய வங்கி வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களை முறியடிக்க, சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என பிரித்தானிய மத்திய வங்கியின் ஆளுநர் அன்ட்ரூ பெய்லி (Andrew…

66 0 0
உலக செய்திகள்

பிரித்தானியாவில் இரவு நேரங்களில் பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடை!

ஐக்கிய இராச்சியம், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்…

84 0 0
உலக செய்திகள்

கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சிக்கியது நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள்!

கனடாவின் மனிட்டோபா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கி மார்க் (78) என்பவரின் வீட்டில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும்…

90 0 0
உலக செய்திகள்

பிரித்தானியாவில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ ஆதரவளித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ (IRGC) பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு குழுவாக அறிவிக்கப்படும் என்றும், அதற்கு ஆதரவு வழங்குவது முற்றாகத் தடை செய்யப்படுவதாகவும்…

103 0 0