உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
186 பார்வைகள்

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியின் பள்ளிக்குடா சந்தியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில், 22 வயதுடைய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று பள்ளிக்குடா சந்தியில் வலதுபுறமாகத் திரும்புவதற்கு முற்பட்டபோது, அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அவருடன் பின்னால் பயணித்தவரும் உடனடியாக மீட்கப்பட்டு பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தெலிகடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய சட்டமூலத்தால் ஆபத்து எதுவுமில்லை.!

இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் குறித்துப் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் தேவையற்றது என்றும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது போராட்டங்களில்…

62 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்!

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம்.…

79 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை நரகமாக மாறியுள்ளது.!

“சிறைச்சாலை நரகத்தைப் போன்று உள்ளது. சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும் நிம்மதியில்லை, உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியில்லை. அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் கவலையுடன் சிறையில் உள்ளேன்.…

87 0 0
இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்; ஒருவர் உ**யிரிழப்பு.!

கொத்மலை, கொட்டகேபிட்டிய பகுதியில் இருந்து கடதொர நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் 500 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து…

67 0 0