உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தாய்லாந்தின் களியாட்ட விடுதி ஒன்றில் தீ விபத்து – 27 பேர் பலி!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
100 பார்வைகள்

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அங்கு தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை இடம்பெற்று வருவதுடன், குறித்த களியாட்ட விடுதியில் அனர்த்தங்களின் போது வௌியேறுவதற்கான அவசர கதவுகள் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாகவே அதிகளவான உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தீப்பரவலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அது தொடர்பில் தாய்லாந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

டெல்லியில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் அதிகாரியின் இராஜினாமாவை வலியுறுத்தியும் உயர் நீதிமன்றத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய டெல்லியில் பலத்த…

42 0 0
உலக செய்திகள்

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் புதி கண்டகி (Budhi Gandaki) நதிப் படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ள நீர் ஆறு பாலங்களை…

61 0 0
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்: ஒருவர் ப@லி, 11 பேர் காயம்!

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள ‘மன்னர் காலித்’ சர்வதேச விமான நிலையத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…

87 0 0
உலக செய்திகள்

பாப்பரசர் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை!

பரிசுத்த பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கண்டறியப்பட்ட சிறிய கட்டியை அகற்றுவதற்காக, எதிர்வரும் நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. ரோமில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில்…

53 0 0