உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சைப்ரஸ் வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் – இந்தியா கடும் கண்டனம்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
78 பார்வைகள்

ஓமான் கடற்கரை அருகே ‘ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி’ (GFS Galaxy) வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சைப்ரஸ் கொடி ஏந்திச் சென்ற இந்த வணிகக் கப்பல், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் பயணித்தபோது ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் (IRGC) தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறை கடுமையாகச் சேதமடைந்து, கப்பலில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தக் கப்பல் தனது பயணத்தைத் தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக ஓமானில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஓமான் அரசுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரான் தொடர்புடைய 140 ராணுவ நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்காவின் சென்ட்காம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0