உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சீனாவின் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் தீ விபத்து – குறைந்தது 28 பேர் பலி

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
70 பார்வைகள்

தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் (Jinjiang) நகரில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் காணொளிகளின்படி, தீப்பற்றிய கட்டிடத்திலிருந்து பெரும் கரும்புகை வானை நோக்கி எழும்புவதையும், தொழிற்சாலையின் கூரை மீது சிக்கிக்கொண்ட பணியாளர்கள் சிலர் உதவி கோரி அலறுவதையும் காண முடிகிறது.

நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, தொழிற்சாலையின் உள்ளே இருந்த 200-க்கும் மேற்பட்டோரைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்தத் துயரமான சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இந்தத் தீ விபத்து பெருமளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விபத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பான அல்லது அலட்சியமாகச் செயல்பட்ட நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட ஜின்ஜியாங் நகரமானது சீனாவில் மட்டுமன்றி உலக அளவிலும் ‘காலணித் தலைநகரம்’ (Shoe Capital) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

தரவுகளின்படி, உலகின் ஒட்டுமொத்த காலணி உற்பத்தியில் கிட்டத்தட்ட 20% இந்த ஒரு நகரிலிருந்தே பெறப்படுகிறது. இங்கு அமைந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுதோறும் 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஜோடி காலணிகள் உலகச் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

டெல்லியில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் அதிகாரியின் இராஜினாமாவை வலியுறுத்தியும் உயர் நீதிமன்றத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய டெல்லியில் பலத்த…

42 0 0
உலக செய்திகள்

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் புதி கண்டகி (Budhi Gandaki) நதிப் படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ள நீர் ஆறு பாலங்களை…

60 0 0
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்: ஒருவர் ப@லி, 11 பேர் காயம்!

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள ‘மன்னர் காலித்’ சர்வதேச விமான நிலையத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…

87 0 0
உலக செய்திகள்

பாப்பரசர் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை!

பரிசுத்த பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கண்டறியப்பட்ட சிறிய கட்டியை அகற்றுவதற்காக, எதிர்வரும் நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. ரோமில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில்…

53 0 0