உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மன்னார் செட்டியார் கட்டையடம்பன் கிராமத்தில் வசிப்பதற்கு காணி இன்றி துன்பப்படும் குடும்பங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
51 பார்வைகள்

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செட்டியார் கட்டையடம்பன் கிராமத்தில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற 35 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருப்பதற்கான காணிகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும், இதனால் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்.

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் குறித்த செட்டியார் கட்டையடம்பன் கிராமம் அமைந்துள்ளது. பிரதான வீதியில் இருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் குறித்த கிராமம் அமைந்துள்ளது.

இக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குறித்த கிராமத்தில் திருமணம் செய்து தனிக் குடும்பங்களாக சுமார் 35 குடும்பம் வசித்து வரும் நிலையில் அவர்கள் வசிப்பதற்கு நிரந்தர காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த 35 குடும்பங்களும் தற்காலிக கொட்டில்களிலும், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வசித்து வருவதுடன் தாங்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

தமக்கு வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதாக இருந்தால் கூட காணி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமது கிராமத்தை சுற்றி போதுமான அளவு அரச காணிகள் காணப்படுகின்ற போதும், காடுகளை வெட்டி எமக்கான காணிகளை பெற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்கின்ற போது வனவள திணைக்கள அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்துவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாங்கள் தொடர்ச்சியாக கிராம அலுவலர், நானாட்டான் பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் எங்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அதிகாரிகளின் அசமந்த போக்கே எமது நிலைக்கு காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், குறித்த கிராமத்தில் பல வீடுகள் யாரும் இன்றி பூட்டிய நிலையில் காணப்படுவதாகவும் ஆனால் காணிகள் இன்றி இக் கிராமத்தில் 35 குடும்பங்கள் வரை வசித்து வருகின்ற போதும் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக எமது கிராமத்திற்குள் வெள்ள நீர் உட்செல்லாத போதும் எமது கிராமத்தை சுற்றி வெள்ள நீர் காணப்பட்டது. இதனால் நாங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

எமது பிரச்சினைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எமக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குறித்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

எனவே நாங்கள் அனைவரும் வேறு எந்த உதவியையும் கேட்கவில்லை. நாங்கள் குடி இருப்பதற்கு ஒரு துண்டு காணி கேட்கின்றோம். சொந்த காணி இருந்தால் மட்டுமே வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே எங்களதும், எமது பிள்ளைகளின் எதிர்காலத்தைகருத்தில் கொண்டு எமது கிராமத்தில் காணி இன்றி பல்வேறு துன்பங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்ற குறித்த 35 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், நானாட்டான் பிரதேச செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி எங்களுக்கு வாழ்வதற்காக ஒரு துண்டு காணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0