உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தனியாருக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க முயற்சி; அனைவரையும் ஒன்று திரளுமாறு அழைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
48 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் நேற்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், மக்களின் காணிகளை அபகரிப்பதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த அரசாங்கமும் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்களின் காணிகளை மக்களிற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இதற்காக நாளை மருதங்கேணியில் அளவீடு செய்யப்படுகின்ற காணியை அளவீடு செய்யவிடாமல் தடுப்பதற்காக அனைவரும் ஒன்று திரளுமாறு கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0