உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

த. வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் முறைப்பாடு!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
55 பார்வைகள்

கு​திரை பேரத்​தில் ஈடு​படும் தமிழக வெற்றி கழகம் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என ஆளுநர் அர்​லேகரிடம் திமுக, அதி​முக சார்​பில் மனுகொடுக்​கப்​பட்​டுள்​ளது.

ஆளுநர் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்​களில் வெற்றிபெற்றது.

காங்​கிரஸ் – 5, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி , இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் – தலா 2 மற்​றும் அ.தி​.முக​வில் இருந்து 25 எம்​எல்​ஏக்​களின் ஆதர​வுடன் நம்​பிக்கை வாக்​கெடுப்​பிலும் அரசு வெற்றி பெற்​றது.

காங்​கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி , இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் அமைச்​சர​வை​யில் பங்​கேற்று, கூட்​ட​ணி​யிலும் இணைந்​துள்​ளன.

அமைச்சரவை மற்றும் கூட்டணியில் இடம்பெற மறுத்துவிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறிவருகின்றன.

இந்த நிலையில்,தமிழக வெற்றி கழகம் லத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார்.

இந்த சூழலில், அதி​முக​வில் இருந்து இது​வரை 6 எம்​எல்​ஏக்​கள் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து ​விட்டு தமிழக வெற்றி கழத்தில் இணைந்​துள்​ளனர்.

இதனால் தமிழக வெற்றி கழகம் குதிரை பேரத்​தில் ஈடு​படு​வ​தாக அதி​முக குற்​றம்​சாட்டி வரு​கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0