• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, July 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

Mathavi by Mathavi
July 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!
Share on FacebookShare on Twitter

நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்து இராணுவ வீரர்கள் பெற்ற வெற்றிகளையும் அவர்களின் கௌரவத்தையும் தற்போதைய ‘திசைகாட்டி’ அரசு திட்டமிட்டுச் சிறுமைப்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

மாத்தறை – கொடபொல பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டு கொழும்பில் டை, கோட் அணிந்து திரியும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு, நமது இராணுவ வீரர்கள் பெருமையுடன் பெற்றுக்கொண்ட பதக்கங்கள் வெறும் ‘இரும்புத் துண்டுகளாகத்’ தெரியலாம். ஆனால், அந்தப் பதக்கங்களுக்குப் பின்னால் இருப்பது மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடைப்பட்ட ஒரு பெரும் போராட்டம் ஆகும். இன்று இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக மூச்சு விடுவதற்குக் காரணம் அன்று போர்க்களத்தில் இரத்தம் சிந்திய எமது இராணுவ வீரர்களே என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது.

கடந்த காலத்தில் எமது அரசு மேற்கொண்ட கொழும்பு துறைமுக நகரம், நெலும் குளுன, அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களை ‘திருட்டுத் திட்டங்கள்’ என்று அன்று கடுமையாக விமர்சித்த ஜே.வி.பி., இன்று அதே திட்டங்களை சர்வதேச முதலீட்டாளர்களிடம் காட்டிப் பெருமை பேசி வருகின்றது. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அன்று தம்மால் தீவிரமாக எதிர்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்புத் துறைமுக நகரத்தையே நாட்டின் முதன்மைப் பொருளாதார மையமாக இன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளன. உர மூட்டை ஒன்றின் விலை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ள போதிலும், அரசு உரிய நேரத்தில் உர மானியங்களை வழங்குவதில்லை. உள்நாட்டு நெல் களஞ்சியங்களில் நெல் தேங்கிக் கிடக்கையில், அரசு திட்டமிட்டு வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றது.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதும் மக்கள் மீது இவ்வாறான அநியாய வரிகள் விதிக்கப்படவில்லை. ஆனால், இன்று மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை மற்றும் வரிகள் மூலம் மக்கள் தாங்க முடியாத சுமையை எதிர்கொள்கின்றனர். எரிபொருள் விலையை 100 ரூபாவால் உயர்த்திவிட்டு, பின்னர் 20 ரூபாவை குறைத்து அரசு நாடகமாடுகின்றது. உரம் இல்லை என்று கேட்கும் விவசாயிகளை பொலிஸாரைக் கொண்டு மிரட்டுவதும், உரிமைகளுக்காக வீதிக்கிறங்கும் பட்டதாரிகள் மீது தாக்குதல் நடத்துவதுமே இந்த அரசின் இன்றைய சாதனையாக உள்ளது.

மீனவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் மீன் இருக்கும் இடத்தைக் காட்டுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசு, இன்று மீனவர்கள் தங்களின் படகுகளுக்கு எரிபொருள் அடிக்கக்கூட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலை நடத்தினாலும் தங்களுக்குப் பலத்த அடி விழும் என்பதால் அரசு திட்டமிட்டுத் தேர்தல்களைத் தவிர்த்து வருகின்றது.

மகா சங்கத்தினரை (பௌத்த துறவிகளை) அவமதிப்பதன் மூலமும், அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதன் மூலமும் மக்களின் பசியைத் தீர்த்துவிட முடியாது என எச்சரிக்கின்றேன். எனவே, நாட்டு மக்களின் யதார்த்த நிலையை உணர்ந்த, பொய் கூறாத, சர்வதேசத்துடன் சுமூகமாகப் பழகக்கூடிய ஒரு பலமிக்க தேசிய சக்தியைக் கட்டியெழுப்ப தங்களோடு கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Related Posts

சாவகச்சேரி உப தவிசாளரை பதவி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் – தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

by selvan
July 6, 2026
0

சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளரை, ஆளுநரின் தனிநபர் விசாரணைக் குழுவின் தீர்மானத்துக்கு அமைய பதவி நீக்கியமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இடைக்காலத் தடை உத்தரவு...

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தொலைக்காட்சி அன்பளிப்பு

by selvan
July 6, 2026
0

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, பிரஜைகள் சாசனம் (Citizen Charter) மற்றும் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில்...

அம்பாறையில் மீன் வரத்து அதிகரித்தும் மீன்களின் விலை உயர்வு!

by selvan
July 6, 2026
0

அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்புகளில் மீன் பிடிபாடு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் சந்தைகளில் கடல் மீன்களின் விலைகள் மீண்டும் உயர்வடைந்து காணப்படுவதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்....

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் – சஞ்சீவ எதிரிமான்ன வலியுறுத்தல்!

by selvan
July 6, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் முழுப் பொறுப்பையும் தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற...

அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

by selvan
July 6, 2026
0

முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் ஊடாக பள்ள கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறந்து விடக்கோரி முள்ளிக்குளம் மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை...

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து.!

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து.!

by Mathavi
July 6, 2026
0

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஏ9 பிரதான வீதியின் நுணாவில் பகுதியில் நேற்று (05) மாலை சுமார் 7.30 மணியளவில் பாரவூர்தி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 6, 2026
0

அநுராதபுரம் - மதவாச்சி, பிஹிம்பியகொல்லேவ பொலிஸ் பிரிவின் சியம்பலாகஸ்வெவ பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை காட்டு யானை தாக்கியதில், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா.!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா.!

by Mathavi
July 6, 2026
0

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஜூலை மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர்...

பேராசையால் திலீப பீரிஸ் தனது பதவியை இழப்பார் – உதய கம்மன்பில சாடல்!

by selvan
July 6, 2026
0

ஒரு இராணுவ வீரரினால் பெறப்பட்ட மிக உயர்ந்த விருதான 'வீர விக்ரம விபூஷண' விருதை கொச்சைப்படுத்தும் வகையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அவமதிப்பாகப்...

வழக்குகளை விரைவுபடுத்த நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும்.!

வழக்குகளை விரைவுபடுத்த நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும்.!

by Mathavi
July 6, 2026
0

இலங்கையில் தேங்கிக்கிடக்கும் இலட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்கு, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி