• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, July 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வழக்குகளை விரைவுபடுத்த நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும்.!

Mathavi by Mathavi
July 6, 2026
in இலங்கை செய்திகள்.
0
வழக்குகளை விரைவுபடுத்த நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தேங்கிக்கிடக்கும் இலட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்கு, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

நீதிமன்றக் கட்டமைப்பில் நிலவும் தாமதங்கள் மற்றும் நீதியரசர்களின் சேவைக்கால நீடிப்பு தொடர்பான சர்ச்சைகள் குறித்து, கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,
“இலங்கை நீதிமன்றங்களில் தற்போது சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, ஒரு வழக்கின் விசாரணை முடிவடைவதற்கே 10 முதல் 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் காணப்படுகின்றது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 70 அல்லது 75 ஆகக் காணப்படுகின்றது. தொழில்முறை ரீதியாக அனுபவம் முதிர்ச்சியடையும் போதே சிறந்த நிபுணத்துவம் கிடைக்கும் என்பதால், மூத்த நிபுணர்களின் சேவையை நாடு தொடர்ந்து பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் போது நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதே தவிர, அவர்களின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படவில்லை. அன்று ஏற்பட்ட அந்தத் தவறைச் சரி செய்வதற்கே தற்போதைய திருத்தங்கள் மூலம் முயற்சிக்கப்படுகின்றது. கீழ் நீதிமன்றங்கள் முதற்கொண்டே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் போது, அது அந்தத் துறையிலுள்ள அதிகாரிகளுக்குப் பெரும் சாதகமாக அமைவதோடு நாட்டுக்கும் நன்மையளிக்கும்.

நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடிப்பதன் மூலம் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றேன். இலங்கையின் நீதித்துறை எப்போதும் சுதந்திரமாகவே இயங்கி வருகின்றது. அரசியல்வாதிகளால் நீதிமன்றங்களின் மீது எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாது. அதேவேளை, தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்குத் தராதரமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

நான் நாடாளுமன்றத்தில் இருந்தபோதே இது தொடர்பான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தேன். சில நாடுகளில் வழக்குகளை 2 ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற காலக்கெடு உள்ளது. இலங்கையிலும் அத்தகைய காலக்கெடு முறையொன்றை உருவாக்கி, நீதிமன்றக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், வழக்குகளை விரைவாக முடிப்பதற்கான உகந்த சூழலை உருவாக்கவும் நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடிப்பது மிக அவசியமான ஒன்றாகும்.” – என்றார்.

Related Posts

மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையமும் ஏமாற்றமளிக்கக் கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையமும் ஏமாற்றமளிக்கக் கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

by selvan
July 6, 2026
0

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி, கட்டுமானப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு திட்டமிடப்பட்டிருப்பது போன்ற 3 மாத காலப் பகுதியில், எரிபொருள் நிரப்பு...

சாவகச்சேரி உப தவிசாளரை பதவி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் – தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

சாவகச்சேரி உப தவிசாளரை பதவி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் – தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

by selvan
July 6, 2026
0

சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளரை, ஆளுநரின் தனிநபர் விசாரணைக் குழுவின் தீர்மானத்துக்கு அமைய பதவி நீக்கியமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இடைக்காலத் தடை உத்தரவு...

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தொலைக்காட்சி அன்பளிப்பு

by selvan
July 6, 2026
0

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, பிரஜைகள் சாசனம் (Citizen Charter) மற்றும் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில்...

அம்பாறையில் மீன் வரத்து அதிகரித்தும் மீன்களின் விலை உயர்வு!

by selvan
July 6, 2026
0

அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்புகளில் மீன் பிடிபாடு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் சந்தைகளில் கடல் மீன்களின் விலைகள் மீண்டும் உயர்வடைந்து காணப்படுவதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்....

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் – சஞ்சீவ எதிரிமான்ன வலியுறுத்தல்!

by selvan
July 6, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் முழுப் பொறுப்பையும் தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற...

அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

by selvan
July 6, 2026
0

முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் ஊடாக பள்ள கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறந்து விடக்கோரி முள்ளிக்குளம் மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை...

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து.!

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து.!

by Mathavi
July 6, 2026
0

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஏ9 பிரதான வீதியின் நுணாவில் பகுதியில் நேற்று (05) மாலை சுமார் 7.30 மணியளவில் பாரவூர்தி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 6, 2026
0

அநுராதபுரம் - மதவாச்சி, பிஹிம்பியகொல்லேவ பொலிஸ் பிரிவின் சியம்பலாகஸ்வெவ பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை காட்டு யானை தாக்கியதில், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா.!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா.!

by Mathavi
July 6, 2026
0

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஜூலை மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர்...

பேராசையால் திலீப பீரிஸ் தனது பதவியை இழப்பார் – உதய கம்மன்பில சாடல்!

by selvan
July 6, 2026
0

ஒரு இராணுவ வீரரினால் பெறப்பட்ட மிக உயர்ந்த விருதான 'வீர விக்ரம விபூஷண' விருதை கொச்சைப்படுத்தும் வகையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அவமதிப்பாகப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி