உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பீஜிங்கில் உயரமான கோபுரத்தில் மோதிய வானூர்தி – விபத்து தொடர்பான தகவல்களை மறைக்கும் சீனா!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
61 பார்வைகள்

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள 109 மாடிகளைக் கொண்ட ‘CITIC’ கோபுரத்தில் சிறிய ரக வானூர்தியொன்று மோதி நான்கு நாட்கள் கடந்துள்ள போதிலும், விபத்துக்கான காரணம் குறித்த விபரங்களை சீன அரசு மூடிமறைத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் விமானி மாத்திரம் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து சீன அரச ஊடகம் 60 சொற்களைக் கொண்ட மிகச் சிறிய அறிக்கையை மாத்திரமே வெளியிட்டுள்ளது.

அத்துடன், விபத்து தொடர்பான காணொளிகள் அனைத்தும் சீன இணையப் பக்கங்களிலிருந்து அதிகாரிகளால் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பீஜிங்கில் இலகு ரக வானூர்தி சேவைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு வானூர்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகக் கடுமையான வான்வெளிப் பாதுகாப்பு நிலவும் பீஜிங் நகருக்குள் இந்த வானூர்தி எவ்வாறு நுழைந்தது எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விபத்துடன் தொடர்பில்லாத, அதிஷ்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் இந்த கட்டடத்தின் சாதாரண புகைப்படங்களைக்கூட சமூக வலைத்தளங்களிலிருந்து அதிகாரிகள் நீக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

86 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0